எரிவாயு லொரி, பேருந்து நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Saturday, February 16th, 2019

கென்யாவில் எரிவாயு டேங்கர் லொரியும் மினி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 6 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

குறித்த விபத்து தொடர்பாக கெரிசோ பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related posts: