எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி!

Sunday, December 8th, 2019

ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அழகிய சிறிய நாடு ஸ்லோவாக்கியா. இந்நாட்டின் கிழக்குப்பகுதியில் உள்ள ப்ரெசொவ் நகரில் உள்ள 12 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பயங்கர வெடி சத்தம் கேட்டது. இதையடுத்து கட்டிடத்தின் மேல் பகுதியிலிருந்து முதல் 5 தளங்களில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் தீயணைப்புப்படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 5 நபர்களின் சடலங்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். 40 பேர் இந்த விபத்தினால் காயமடைந்துள்ளனர்.

மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts: