எரிமலை வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

கௌதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறிய இந்த எரிமலையிலிருந்து எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் பரவியுள்ளன.
பெரும்பாலான வீடுகளை எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கௌதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
நாடு திரும்பும் அகதிகளுக்கு 2000 பவுண்ஸ் நிதி - பிரித்தானியா !
அத்துமீறினால் அழிப்போம்: அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா!
ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் - ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
|
|