எரிமலை வெடிக்கும் அபாயம்: அச்சத்தில் சிலி மக்கள்!

download Friday, January 12th, 2018

சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை அந்நாட்டு அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பாக அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

கமராக்களை பொருத்தி வெடிப்பு தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது பாரிய வெடிப்பிற்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த எரிமலை ஆர்ஜன்டீன எல்லையை அண்மித்த பிராந்தியத்தில் காணப்படுவதால் வெடிப்பு ஏற்படின் அதன் தாக்கம் ஆர்ஜன்டீனாவிலும் பெரிதும் உணரப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


2018-01-18 09.41.30

வீணைச் சின்னம் என்பது உங்கள் பிரதேச அபிவிருத்திக்கான சின்னம்!…