எரிமலையை தொடர்ந்து நிலநடுக்கம் – கௌதமாலாவில் சோகம்!

Tuesday, June 5th, 2018

கௌதமாலா நாட்டில், நேற்று 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கௌதமாலாவில் புயீகோ என்ற எரிமலை வெடித்ததில் கௌதமாலா சர்வதேச விமான நிலையம் உடனடியாக மூடப்படுவதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பினால் நேற்று வரை 62-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கடியில் 10 கிலோமீட்டர் ஆளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Related posts: