எரிபொருள் முற்றாக தீர்ந்தது காரணம்!

பிரேசில் கால்பந்து அணி உட்பட 80 பயணிகளுடன் கொலம்பியாவில் விபத்துக்கு உள்ளான விமானம் போதிய எரிபொருள் இல்லாததால் அவசரகமாக தரை இருங்குவதற்கு அனுமதி கோரியிருந்தும் சில நிமிடங்கள் காத்திருக்குமாறு கேட்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் கொலம்பியாவின் மடலின் விமான நிலையத்தில் கடமையில் இருந்த பெண் விமான கட்டுப்பாட்டாளர், ஏற்கனவே ஒரு விமானம் தரை இறங்க ஓடுபாதையை நெருங்கி விட்டதால் 7 நிமிடங்கள் கழித்தே பிரேசில் விமானம் தரை இறங்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
விமானத்துக்கும் கட்டுப்பாட்டு நிலையத்துக்குமான கடைசி நேரே உரையாடல்களை இன்று கொலம்பிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன
ஆனால் 7 நிமிடங்கள் ஆகாயத்தில் இருக்கும் அளவு விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருக்கவில்லை. 4 நிமிடங்கள் கழித்து மீண்டும் கட்டுப்பட்டு அறையுடன் பேசிய விமானி மிகவும் பதட்டமான குரலில் எரிபொருள் போதாமையால் விமானத்தில் மின்சாரம் முற்றாக தடைபட்டு விட்டது என்று கூறியியருக்குறார். அதன் பின்னரே கட்டுப்பட்டு அறையில் இருந்தவருக்கு நிலைமையின் பாரதூரம் புரிந்துள்ளது.
ஏற்கனவே ஓடுபாதையை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தை திசைதிருப்பி விட்டு பிரேசில் விமானத்துக்கு தரை இறங்க கடைசி நேரத்தில் அனுமதி வழங்க பட்டிருக்கிறது, ஆனால் அந்த அனுமதியை பெற்றுக்கொள்ளும்போது விமானம் வீழ்ந்திருந்தது.
இந்த விமானம் மின்சாரமோ இயந்திரமோ செயல்படாமல் முற்றிலும் செயல் இழந்த நிலையில் தரையில் வீழ்ந்ததாக இந்த விபத்தில் உயிர் தப்பிய ஒரு ஊழியர் தெரிவித்துள்ளார்.
British Aerospace 146 Avro RJ85 jetliner விமானங்கள் 2965 km தூரம் வரை மட்டுமே ஒரு தடவையில் பறக்க கூடியவை.
புயல், அல்லது அவசர நிலைஒன்றின் போது வேறொரு விமான நிலையத்தில் தரையிறக்க வசதியாக எப்பொழுதும் குறைத்த பட்சம் 45 நிமிட நேரத்துக்கு பறக்கும் அளவு மேலதிக எரிபொருளை பொதுவாக எல்லா விமானங்களும் தன் வசம் கொண்டிருப்பது வழக்கம்.
இந்த விபத்துக்கு உள்ளான விமானத்தின் எரிபொருள் மர்மம் குறித்து விசாரணை தொடர்கிறது.
Related posts:
|
|