எரிபொருள் மீதான வரி உயர்விற்கு எதிர்ப்பு போராட்டம்!

Monday, November 19th, 2018

பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் அவற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பதால் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அதிபர் இம்மானுவல் மெக்ரான் அறிவித்தார்.

இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதுடன், 2034 இடங்களில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றது. அதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது வன்முறை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்தவர்களில் 14 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 157 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை பிரான்ஸ் உள்துறை மந்திரி கிறிஸ்டோப் கேஸ்டனர் தெரிவித்தார்.

Related posts: