எம்.எல்.ஏக்கள் நல்ல முடிவை எடுக்கக் கோரி வாக்காளர் பேரணி: ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு!

Friday, February 17th, 2017

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் நியாயமான முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாளை முதல் தமிழகத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர் பேரணி, ஊர்வலம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலர் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

இன்று மாலை, சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்ற பன்னீர் செல்வம், அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது குறித்து குறிப்பிட்ட அவர், “இது ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளின் ஆட்சி இல்லை. சசிகலா குடும்ப ஆட்சிதான் பதவியேற்றுள்ளது. அந்த அரசை நீக்கி மீண்டும் மக்கள் அரசை நிறுவுவோம். இந்த சபதத்தை விரைவில் நிறைவேற்றுவோம்,” என்றார் பன்னீர் செல்வம்.

panneerselvam-afp_650x400_81487240578

Related posts: