எபோலா நோய்க்கான அவசர நிலை பிரகடனம் முடிவுற்றதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அதிர வைத்த எபோலா நோய்க்கான அவசர நிலை பிரகடனம் நிறைவடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது
ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளான லைபீரியா, சியாரா
லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் எபோலா எனப்படும் உயிர்க்கொல்லி நோய் கடந்த 2013-ம் ஆண்டில் வேகமாகப் பரவி வந்தது
இந்த நோய்க்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதுவரை 11 ஆயிரத்து 300 பேர் இந்த நோய்க்கு பலியாகியுள்ளனர். இதில் குனியா, லிபெரியா மற்றும் சிர்ரா லியோன் ஆகிய நாடுகளில் தான் உயிரிழப்பு அதிகம்
இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், லைபீரிய அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது. அதேபோல் நைஜீரிய அரசும் அரசு அவசர நிலை பிரகடனம் செய்தது
மேலும் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு கடந்த 2014-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஜெனீவாவில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கூட்டத்திற்கு பின்னர், அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது இந்நிலையில், எபோலா நோய்க்கான அவசர நிலை பிரகடனம் நிறைவடைந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்
Related posts:
|
|