என் ஒற்றை மயிரைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது தமிழச்சி சவால்!

Saturday, October 1st, 2016

இந்திய சட்டப் பிரிவுகள்’ என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது என தமிழச்சி தெரிவித்துள்ளார்

“தமிழச்சி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு 153 கலவரம் தூண்டுதல், 505/1 வெறுப்பை தூண்டுதல், 505/2 வதந்தி பரப்புதல் ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் உடல்நலம் குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துரை ஆணையர் எச்சரித்துள்ளார்” என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

சுவாதி படுகொலையில் தொடர்புடைய கருப்பு முருகானந்தம் மீது 38 வழக்குகள் உள்ளன. அதில் 20 வழக்கு பிரிவுகளின் கீழ் உள்ள ஒரு இந்திய பிரஜையான கருப்பு முருகானந்தம் மீது ‘மதக் கலவரம் தூண்டுதல்’, ‘இந்து இஸ்லாமியர்களுக்கு இடையில் வெறுப்பை தூண்டுதல்’ உள்ளீட்ட வழக்கு பிரிவுகளும் உள்ளன .அவர் எவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதை பாருங்கள்.

கருப்பு முருகானந்தத்தை அரசியலுக்கு அழைத்து வந்தவர் எச்.ராஜா.

பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் பதவி.

2016-இல் சட்டசபை தேர்தலில் தஞ்சையில் வேட்பாளராக அறிவிப்பு.

இந்திய பிரதமர் மோடிக்கு நெருக்கமான நட்பு. மோடி இவருக்காக தமிழ்நாட்டுக்குள் தேர்தல் பிரச்சாரம்.

சில மாதங்களுக்கு முன்பு சென்னை துறைமுகத்தில் முக்கிய பதவி.

இப்படி பெரும் வாய்ப்புகளால் சூழப்பட்டுள்ள இந்திய பிரஜை கருப்பு மீதான வழக்குகளுக்கு சட்டம் பாய்ந்ததன் விளைவுதான் இத்தனை புகழாரங்கள் கருப்புக்கு கிடைத்துள்ளது.

இந்த இலட்சணத்தில் இருக்கும் ‘இந்திய சட்டப் பிரிவுகள்’ என் மீது பாயும் வலிமை அதற்கு கிடையாது. என் மயிரில் ஒன்றைக் கூட இந்திய சட்டத்தால் புடுங்க முடியாது என்கிறார்கள் எனது மனித உரிமை மீறல் அமைப்பைச் சேர்ந்த ப்ரெஞ்ச் சட்ட ஆலோசகர்கள்.

கருப்பு முருகானந்தம் குறித்து நான் அவதூறு செய்வதாக கூறி திருப்பூரில் போலிசில் புகார் செய்த கருப்புவின் வழக்கு பிரதியே ஒன்றரை மாதங்களாகியும் எனக்கு கிடைக்கவில்லை. இதில் சென்னை மத்திய சைபர் க்ரைம் வேறு பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிடுகின்றன. இந்த வழக்கு பிரதியாவது என் கைக்கு கிடைக்குமா என்று பார்ப்போம்.

சுவாதி / ராம்குமார் படுகொலைகள் விவாதங்களில் இருந்து திசைமாறிவிடக் கூடாது என்று கவனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவப்போது இப்படி காமெடி செய்து கொண்டிருப்பவர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.இந்தியாவிற்குள் இருக்கும் க்ரீமினல்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசும் மத்திய அரசும் முயற்சிக்கட்டும். பிறகு அவர்களுடைய அரசியலை விவாதமாக்கும் சமூக ஆவலர்கள் மீது இந்திய சட்டத்தை பாய்ச்சட்டும்.

tamilachi-696x626-218x150

Related posts: