எந்த நேரத்திலும் வடகொரியா அமெரிக்காவை தாக்கலாம்!

Tuesday, June 13th, 2017

அமெரிக்கா மீது எந்த நேரத்திலும் வடகொரியா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு நிறுவன அதிகாரி Vice Admiral James தெரிவித்துள்ளார்.

ஏவுகணை சோதனையை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கும் வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை வாயிலாக அமெரிக்காவை விரைவில் எட்ட முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என ஜேம்ஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

வடகொரியா தமது ஏவுகணை படைகளை வளர்ப்பதில் பெரும் முன்னேற்றங்களை கொண்டுள்ளது. பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதில் கடந்த 6 மாதங்களில் வடகொரியாவின் செயற்பாட்டை உலக நாடுகள் கண்கூடாக பார்த்துள்ளன.

எனவே வடகொரியாவின் வேகம் அதிகரித்துக்கொண்டு வருவதால், அந்த ஏவுகணை தாக்குதல் மூலம் அமெரிக்காவை நெருங்குவதற்கு வடகொரியா தயாராக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் கடந்த வியாழன் அன்று வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் வான்ஸன் நகரத்திலிருந்து குறுகிய தூர ஏவுகணை சோதனைகளை வடகொரியா நிகழ்த்தியுள்ளது இந்த ஏவுகணை சுமார் 124 மைல்களுக்கு அப்பால் பறந்து ஜப்பான் கடலில் விழுந்துள்ளது.

மேலும் ஜப்பான் அருகில் அமெரிக்க இராணுவ தடங்கள் வேறு அமைக்கப்பட்டிருப்பதால், வடகொரியாவின் நோக்கம் அமெரிக்காவின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே ஆகும். எனவே நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என James தெரிவித்துள்ளார்.

Related posts: