எத்தகைய சவால்கள் வந்தாலும் பாலஸ்தீன மக்களின் மண்ணை விட்டு வெளியேற மாட்டார்கள் – பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவிப்பு!
Sunday, October 22nd, 2023எத்தகைய சவால்கள் வந்தாலும் பாலஸ்தீன மக்களின்; மண்ணை விட்டு வெளியேற மாட்டார்கள் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பலஸ்தீன ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையில் ஆரம்பித்த மோதல்களை தீர்த்து வைக்கும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. எகிப்து அதிபர் அல்-சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்க தூதர்கள் பங்கேற்றதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டாலும், மேற்குலக ஊடகங்களின்படி, அமெரிக்க பிரதிநிதித்துவம் இல்லை. இஸ்ரேலிய பிரதிநிதிகளும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முன்னாள் மாலைத்தீவு ஜனாதிபதி இங்கிலாந்தில் தஞ்சம்!
ஒக்டோபரில் மூன்று மாகாண சபைகளின் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல்!
22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!
|
|