எதிர்வரும் 11ஆம் திகதி பதவியேற்கிறார் இம்ரான் கான்!

Tuesday, July 31st, 2018

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் அநேகமான தொகுதிகளில் வெற்றிபெற்ற முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கட் அணித்தலைவர் இம்ரான் கான், எதிர்வரும் 11ஆம் திகதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு வானொலி அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அநேகமான தொகுதிகளை கைப்பற்றிய போதும் ஆட்சியமைக்க பெரும்பான்மை இல்லாததால் மற்றைய சிறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: