எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு!

Friday, August 26th, 2016

சிம்பாபுவேயின் தலைநகரான ஹராரேயில் மாபெரும் ஆர்பாட்டம் என்று எதிர்க்கட்சியினர் அழைக்கின்ற போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் சிம்பாபுவே காவல்துறையினர் கலைத்துள்ளனர்.

போராட்டம் தொடர்ந்து நடைபெறலாம் என்றும், காவல்துறை இதில் தலையிடக் கூடாது என்றும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குழுக்களின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஆளுகின்ற சானு-பிஃஎப் கட்சிக்கு நாட்டின் அமைப்பு ஆதரவாக செயல்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 92 வயதான அதிபர் ராபர்ட் முகாபே மீண்டும் அதிபராக போட்டியிடும் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார்.

Related posts: