எதியோப்பிய விமான விபத்து – கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு!

Tuesday, March 12th, 2019

கடந்த ஞாயிற்றுக்கிழமை எதியோப்பியாவில் விபத்திற்குள்ளான போயிங் 737 விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எதியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அந்த விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டதாக எதியோப்பியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பதிவாகியுள்ள விமானியின் உரையாடல்களை வைத்து விபத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: