எதியோப்பியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய புகையிரத பாதை ஆரம்பம்!

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபபாவை, செங்கடல் துறைமுகமான ஜிபூட்டியுடன் இணைக்கும் புதிய மின்சார புகையிரத பாதை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இருதரப்புப் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் ஒரு முயற்சியாக அந்த ரயில் பாதை பார்க்கப்படுகிறது.சாலை மார்க்கமாக செல்லும் பல நாள் பயணத்துடன் ஒப்பிடுகையில், அந்த ரயில் பத்து மணி நேரத்தில் 750 கிமீ தூரம் பயணம் செய்கிறது.
3.4 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு சீன நிறுவனங்களால் அந்த ரயில் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அது சீன பணியாளர்களை கொண்டு இயக்கப்படும். எத்தியோப்பியாவின் சுமார் 90 சதவீத சர்வதேச வர்த்தகம், ஜிபூட்டி துறைமுகத்தின் வழியாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி!
ஜல்லிக்கட்டு வன்முறை: தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
பயன்படுத்தப்படாத Google கணக்குகளை நீக்க திட்டம்!
|
|