எச்.ஐ.வி வைரஸை வெற்றிகரமாக அகற்றிய நிபுணர்கள்!

Monday, July 8th, 2019

எச்.ஐ.வி தாக்கமுள்ள எலிகளிடமிருந்து, குறித்த வைரஸை, அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

எச்.ஐ.வி தாக்கமுள்ள மனிதர்களுக்கான சிகிச்சை முறைமையை கண்டறிவதற்கான முதல் படிநிலையாக இது கருதப்படுகிறது.

அமெரிக்காவின் நெப்ரஸ்கா   மற்றும் டெம்பிள்  பல்கலைக்கழகங்களின் 30இற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் இந்த சிகிச்சை முறைமையில் பங்கேற்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது வைரஸ் ஒழிப்பு மருந்தை, மரபணு சோதனைக் கருவி  ஊடாக எலிகளின் உடல்களுக்குள் செலுத்தியுள்ளனர்.

இவ்வாறு எலிகளின் மரபணுவில், எச்.ஐ.வி வைரஸை வெற்றிகரமாக அகற்றும் மரபணு சோதனை முயற்சியை, மனிதர்களிடையே சோதனைக்கு உட்படுத்த வேண்டுமாயின், அமெரிக்க உணவு மற்றும் ஒளடதங்கள் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: