எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை!

Wednesday, May 17th, 2017

வடகொரியா புதிதாக மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய தடைகளை விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 15 உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுபோன்ற பசிசோதனைகளை மேலும் நடத்தக்கூடாது என அவர்கள் வடகொரியாவிடம் வலியுறுத்தியுள்ளனர். 700 கிலோமீற்றர் தூரம் பயணிக்கக் கூடிய ஏவுகணை பரிசோதனையொன்றை வடகொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டமை தொடர்பிலேயே ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.

Related posts: