எச்சரிக்கை: அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராகிறது வடகொரியா!  

1507273988_1283118_hirunews_NEWSTHUMBcopycopy Friday, October 6th, 2017

கிம் ஜாங் உன்-இன் வட கொரிய நிர்வாகம் தனது இறுதி ஆயுதமாக அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா மற்றும் தென் கொரியவுக்கு இடையிலான பாரம்பரிய போரில் வட கொரியா நிச்சயம் தோல்வியடையும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பின் கிலிண்டனின் பாதுகாப்பு செயலாளர் ஜே பெரி குறிப்பிட்டுள்ளார்.

வட கொரியாவின் நிர்வாகம் வீழ்ச்சியடையும் நிலைக்கு வரும் போது அவர்கள் அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என்பதுடன், அத் தாக்குதல் சோல் மற்றும் டொக்கியோ நகரங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படலாம் என அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஜே பெரி தெரிவித்துள்ளார்.இதன் காரகணமாக வட கொரியாவை முழுமையாக தோல்வியடைய செய்வதற்கு முன்னர், 10 மில்லியன் பேர் வரையில் உயிரிழக்கக்கூடும்  என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.