எகிப்தில் மூன்றுநாள் தேசிய துக்கம் அனுசரிப்பு!  

Monday, December 12th, 2016

கெய்ரோவின் காப்டிக் தேவாலயத்திற்கு அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, மூன்று நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று எகிப்து அதிபர் சிஸி அறிவித்துள்ளார்.

இது ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதல் என்று வர்ணித்த சிஸி, இதில் ஈடுபட்டவர்களை நீதிக்குமுன் கொண்டு வருவதாக உறுதி பூண்டுள்ளார்.

இந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

தேவாலயத்தில் ஞாயிறு திருப்பலி பூசை நடந்து கொண்டிருந்த போது ஒரு பக்கத்தில் வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலனாவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 _92926330_gettyimages-629135318

Related posts: