எகிப்தில் பாரிய தொடருந்து விபத்து : 15 பேர் பலி 40 க்கும் அதிகமானோர் காயம்!

Friday, March 2nd, 2018

எகிப்தின் – கெய்ரோ நகருக்கு அருகில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளதுடன் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பயணிகள் தொடருந்தும், பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு தொடருந்தும் மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது பயணிகள் தொடருந்தில் பயணித்த 15 பேரேபலியானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts: