ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் வட கொரியா!

Monday, May 30th, 2016
ஊழியர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதமாக 200 நாள் பிரச்சார திட்டம் ஒன்றை வட கொரியா அறிவித்துள்ளது.

புதிய ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தின் ஒரு பகுதியாக விசுவாசத் திட்டம் என்றழைக்கப்படும் இத்திட்டத்தை வட கொரியா அறிவித்துள்ளதாக நாட்டின் அதிகார்வபூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று இந்த மாதம் முன்னதாக நிறைவடைந்த 70 நாள் வேலை திட்டத்தின் போது, அதிகரிக்கப்பட்ட செயல் திறன் இலக்குகளை அடையும் முயற்சிகளில், பணியாளர்கள் தங்களது தொழிற்சாலைகளிலும், பண்ணைகளிலிலேயே உறங்கி எழுந்து பணி செய்தது குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுதம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா உருவாக்குவதை அடுத்து, அதை தண்டிக்கும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை வட கொரியா மீது பல பொருளாதார தடைகளை விதித்திருந்தது. இதன் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

Related posts: