ஊழலுக்கு ‘பேராசைபிடித்த மனைவிகளே காரணம்’ என்கிறார் இந்தோனீஷிய அமைச்சர்

Tuesday, April 26th, 2016

இந்தோனீஷியாவில் ஆடவர் ஊழலில் ஈடுபடுவதற்கு பேராசை பிடித்த மனைவிகளே பகுதியளவில் காரணம் என அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

மதவிவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் லுக்மான் ஹக்கீம் சைஃபுதீன் தெரிவித்திருந்த இந்தக் கருத்தை பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பல சந்தர்ப்பங்களில், குடும்பத்துடன் இல்லாது இருக்கும் சூழலில், அதற்கு பரிகாரமாக அவர்களுக்கு அன்பளிப்புக்களை கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும், அதன் காரணமாக ஊழல் மூலம் அவர்கள் பணத்தை சேர்க்கும் நிலைக்கு தள்ளபடக்கூடும் என, மாநாடு ஒன்றில் அவர் கூறியதே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துளது.

இப்பிரச்சனையை சமாளிக்க, தமது கணவர்களால் வாங்கிக் கொடுக்க முடியாத விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை மனைவிமார் வற்புறுத்தாமல் இருக்க வேண்டும் எனவும் சைஃபுதீன் அந்த மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார்

Related posts: