ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

152766131412750 Tuesday, June 12th, 2018

வேலூர் மாவட்டத்திலுள்ள தனியார் ஊதுபத்தி தயாரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே வன்னிமேடு என்ற இடத்தில் தனியார் ஆலைக்கு சொந்தமான இன்டர்நேஷனல் ஊதுபத்தி ஆலை குடோன் இயங்கி வருகிறது. குடோனில் திடீரென பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படை வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் மற்றும் எந்திரங்கள் சேதமடைந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.