ஊடகவியலாளர் கொலை: ரஷ்யாவிற்கு எதிராக நடந்த தந்திரம்!

Friday, June 1st, 2018

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரை யுக்ரெயின் அரசாங்கம், அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரத்துக்குள் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஆர்காடி பப்சேன்கோ என்ற குறித்த ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு விட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

எனினும் அவரை கொலை செய்வதற்கான ரஷ்யாவின் சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக யுக்ரெயின் அறிவித்துள்ளது.

இந்தகொலையை புரிவதற்காக ரஷ்யாவினால் நியமிக்கப்பட்ட கொலையாளியை பிடிக்கவே இந்த திட்டம் அமுலாக்கப்பட்டதாகவும், அதன்படி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் யுக்ரெயின் பாதுகாப்பு பிரதானி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இது ரஷ்யாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தந்திர நாடகம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

Related posts: