உஸ்பெகிஸ்தான் அதிபர் மரணம்!
Friday, September 2nd, 2016
முன்னாள் சோவியத் யூனியனிடம் இருந்து விடுதலை பெற்ற உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராக இருந்து வந்த இஸ்லாம் கரிமோவ் (வயது 78), பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள வைத்தியசாலையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இவர் தனது வாரிசு என யாரையும் அறிவிக்கவில்லை. அடுத்து அங்கு அதிபராக யார் பதவி ஏற்பது என்பதை அவரது குடும்பத்தினரும், உயர் அதிகாரிகளும் மூடிய அறையில் விவாதித்து முடிவு எடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Related posts:
ரோமின் முதல் பெண் மேயர்!
சட்டவிரோதமான கடற் பயணம் - இரண்டு நாட்களில் 215 அகதிகள் சடலமாக மீட்பு!
கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!
|
|