உலங்குவானூர்தியால் 14,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டது!

கனடாவில் உலங்குவானூர்தி ஒன்று மின்னழுத்த கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும் விபத்தை தொடர்ந்து அப்பகுதியில் 14,000 வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு நியூ பிரன்சுவிக் Campbellton அருகே உள்ள Flatlands-ல் மின்னழுத்த கம்பியில் மோதிய உலங்குவானூர்தி நிலை தடுமாறி ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தை தொடர்ந்து கியூபெக் அருகே இருக்கும் பகுதியில் உள்ள 14,000 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.விபத்து குறித்து விசாரணை நடத்த சம்பவயிடத்திற்கு விசாரணை குழு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 2000 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
இலங்கை அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு!
கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் மாயம்!
சட்டவிரோதமாக குடியேறிய எவரும் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு!
|
|