உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவரானார் நைஜீரியாவின் என்கோச்சி ஒகோன்ஜோ இவெலா!

Wednesday, February 17th, 2021

உலக வர்த்தக அமைப்பின் (WTO) முதல் பெண் தலைவராக நைஜீரியாவில் இரண்டு முறை முன்னாள் நிதியமைச்சராக இருந்த என்கோச்சி ஒகோன்ஜோ-இவெலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் ஏழாவது புதிய தலைவராக மட்டுமல்லாமல் முதல் பெண் தலைவர் மற்றும் முதல் ஆபிரிக்க தலைவர் என்ற பெருமையை ஒகோன்ஜோ-இவெலா பெற்றுள்ளார்.
இவெலாவின் பதவிக்காலம் மார்ச் முதலாம் திகதி தொடங்கி 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதியுடன் முடிவடையும்.
இரண்டு முறை நைஜீரியாவின் நிதி அமைச்சராக இருந்த என்கோசி ஒகோன்ஜோ-இவெலா உலக வர்த்தக அமைப்பின் அடுத்த இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
நாடுகளுக்கு இடையிலான வர்த்தக விதிகளை நிர்வகிக்கும் முதல் ஆபிரிக்க மற்றும் முதல் பெண் இவராவார்.
“இது உலக வர்த்தக அமைப்பிற்கு மிகவும் முக்கியமான தருணம்” எனவும் உலக வர்த்தக அமைப்பின் பொதுக்குழுத் தலைவர் டேவிட் வாக்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: