உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் இராஜினாமா!

Tuesday, January 8th, 2019

உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம், தமது பதவி விலகலை அறிவித்துள்ளார். 59 வயதான அவரது பதவிக் காலம் 2022ஆம் ஆண்டிலேயே நிறைவடையவுள்ளது.

எனினும் ஆறு வருடங்கள் உலக வங்கியின் தலைவராக இருந்த அவர், இந்த ஆண்டு பெப்ரவரி 1ம் திகதி முதல் அந்த பதவியில் இருந்து விலகுகிறார்.

அவர் 2017ஆம் ஆண்டு இந்த பதவிக்கு இரண்டாவது முறையாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அவர் உட்கட்டுமான முதலீடுகள் ஊடாக நாடுகளை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் வகையான நிறுவனம் ஒன்றில் இணைந்துக் கொள்ளவிருப்பதாக உலக வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எதிர்பாராத அவரது இந்த அறிவிப்புக்கான காரணங்கள் எவையும் இன்னும் முன்வைக்கப்படவில்லை.

புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரையில், தற்போதைய உலக வங்கியின் நிறைவேற்று அதிகாரி க்றிஸ்டலினா ஜோர்ஜியாவா இடைக்காலத் தலைவராக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related posts: