உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் தொடர்ந்தும் முதலிடத்தில்!

Wednesday, March 22nd, 2017

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

அமெரிக்க வர்த்தகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ், பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 86 பில்லியன் டொலர் என தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் அமெரிக்காவின் முதலீட்டாளர் வாரண் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 75.6 பில்லியன் டொலராகும்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பியோஸ் மூன்றாவது இடத்தில் உள்ளார்.பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் (11.4 பில்லியன் டொலர்) ஐந்தாவது இடத்தில் உள்ளார்.இந்த பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 220 இடங்கள் கீழிறங்கி பட்டியலில் 544 ஆவது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 3.4 பில்லியன் டொலராகும்.

Related posts: