உலக சந்தைகளில் விலை உயர்வு – பிரித்தானியாவில் எரிவாயு விலை 7 வீதத்தால் உயர்வு!

Thursday, July 28th, 2022

ஐரோப்பாவில் தேவை அதிகரிப்பதால், உலக சந்தைகளில் விலை உயர்வால் பிரித்தானியாவும் பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் எரிவாயு விலை இன்று புதன்கிழமை 7 வீதத்தால் உயர்வடைந்துள்ளதுடன், இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணங்கள் முன் எப்போதும் இல்லாத வகையில் 700 பவுண்ஸ்சாக அதிகரித்திருந்தது.

மேலும் ஒக்டோபரில் ஒரு பொதுவான குடும்பத்திற்கு ஆண்டுக்கு 3,363 பவுண்ஸ் என்ற நிலைமை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், எரிவாயுவை சேமிப்பது மற்றும் களஞ்சியப்படுவது குறித்து கடிமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் உக்ரைய்ன் மீதான படை நடவடிக்கையின் பின்னர் ரஷ்யாவின் சுவட்டு எரிபொருளில் தங்கியிருப்பதை குறைப்பது குறித்து ஐரோப்பிய தலைவர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்யாவின் எரிவாயு நிறுத்தப்படுமாயின், எரிவாயு பயன்பாட்டை நிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இணங்கியுள்ளன. எனினும் சில நாடுகளுக்கு இதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு பயன்பாட்டை நிறுத்துவது தொடர்பான பரிந்துரையை கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் முன்வைத்திருந்தன.

அத்துடன் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் மார்ச் மாதம் வரை எரிவாயு பயன்பாட்டை 15 வீதத்தால் குறைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இணங்கியுள்ளன. 

000

Related posts: