உலகை காப்பாற்றிய நபர் உயிரிழந்தார்!

Saturday, September 9th, 2017

சோவியத் ரஷ்யவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடக்கவிருந்த அணு ஆயுத போரை சாமர்த்தியமாக தடுத்த சோவியத் அதிகாரி தமது 77 வது வயதில் காலமாகியுள்ளார்.

ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் அப்போது சோவியத் ரஷ்யாவில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த 1983, செப்டம்பர் 26 ஆம் திகதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் அருகாமையில் உள்ள ராணுவ தளத்தில் ரடார்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி நள்ளிரவு கடந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தினரிடம் இருந்து திடீரென்று தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது இவருக்கு தெரிய வந்துள்ளது.ரஷ்ய ராணுவத்தின் சட்ட திட்டப்படி, எதிரி நாடுகளின் ஏவுகணை தாக்குதல்களுக்கு உடனடியாக அணுஆயுதம் தாங்கிய ஏவுகணை தாக்குதல் நடத்த வேண்டும் என்பதாகும்.ஆனால் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் அமெரிக்காவின் குறித்த நடவடிக்கையை தனது உயரதிகாரிகளிடம் இருந்து மறைக்க விரும்பியுள்ளார்.

மொத்த தரவுகளும் தொகுக்கப்பட்ட நிலையில் தயாராக இருந்தது. அதை ஒரே ஒரு அதிகாரிக்கு மட்டும் அனுப்பியிருந்தால், மறுப்பேதும் தெரிவிக்காமல் பதிலடி தாக்குதலுக்கு உத்தரவு வந்திருக்கும் என பின்னர் தனியார் ஊடகம் ஒன்றில் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் தெரிவித்திருந்தார்.தொடர்ந்து அவர் தங்களது கணணிகளில் கோளாறு ஏற்பட்டதாக கூறி உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 23 நிமிடங்களுக்கு பின்னர் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் உறுதி செய்துள்ளார், உண்மையில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தவில்லை என்றும், தங்களது கணணியில் ஏற்பட்ட கோளாறு காரணமே ரடாரில் ஏவுகணை தாக்குதல் போன்ற அதிர்வுகள் பதிவானது என.ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் எடுத்த சம்யோசித முடிவுக்கு பலர் பாராட்டு தெரிவித்தாலும், ராணுவ குறிப்புகளில் அதை பதிவு செய்யாததற்கு அதிகாரிகள்  தரப்பில் இருந்து கண்டனமும் தெரிவிக்கப்பட்டன.அதன்பின்னர் 1998 ஆம் ஆண்டு பெட்ராவ் எடுத்த முடிவு குறித்த தகவல் வெளியானதும் பெரும்பாலானோர் அவரை வாழ்த்தியுள்ளனர்.இரண்டு வல்லரசுகளுக்கிடையே நடக்கவிருந்த அணுஆயுத போரை தடுத்து நிறுத்தியவர் எனவும் புகழாரம் சூட்டினர்.

Related posts: