உலகின் மிக வயதான கைதி விடுவிப்பு!

Wednesday, July 20th, 2016
வங்க தேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச் சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது.

ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டார் என்றும் பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடிகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுள் தண்டனையில் 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts: