உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி பாரதப் பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைப்பு!!

Friday, January 6th, 2023

உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

வாரணாசி மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் மற்றும் மண்டல ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா ஆகியோர் பிரதமரின் வரவேற்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து பயணிக்கும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது.

பின்னர் பங்களாதேஷ் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1 ஆம் திகதி அடைகிறது.

‘கங்கா விலாஸ்’ எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் பங்களாதேஷில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் பயணிக்கின்றது.

00

Related posts: