உலகின் சிறந்த 15 விமான நிலையங்களில் சிங்கப்பூர் முதலிடம் !

Monday, March 20th, 2017

உலகின் சிறந்த 15 விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது

நுகர்வோர் விமான போக்குவரத்து வலைத்தளத்தில் இங்கிலாந்தின் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் உலக விமான விருதுகள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டன.

ஆண்டறிக்கைகளின் படி,சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இங்கிலாந்தின் ஸ்கைட்ராக்ஸ் கழிவறைகள் மற்றும் விமான நிலைய ஊழியர்களின் மொழி திறன் உட்பட செயல்திறன் ஆகிய 39 சேவைகளை உள்ளடக்கியே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை Tokyo Haneda சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தை Incheon விமான நிலையமும் பெற்றுள்ளன.

முறையே முனிச்,ஹோங்கொங், ஹமாத் ,மத்திய ஜப்பான், சூரிச், லண்டன் ஹெத்ரோ,பிராங்பிரட், அம்ஸ்டெர்டம் சிப்பொல்,கன்சவி,வென்கொவர்,டோக்யோ நாரிட்டா,Copenhagen ஆகிய விமான நிலையங்கள் 4 தொடக்கம் 15 ஆவது இடங்களை பிடித்துள்ளன.

Related posts: