உலகின் இரண்டாவது உயரமான பாய்மரக்கப்பல் இலண்டனுக்கு விஜயம்!

Thursday, July 27th, 2017

பெரு கடற்படையின் முக்கிய பயிற்சிக்கப்பலும் உலகின் இரண்டாவது உயரமான பாய்மரக்கப்பல் இலண்டனுக்கு விஜயம் செய்துள்ளது.

யூனியன் என்ற பெயருடைய இந்தக்கப்பல் 115 மீற்றர் உயரமும் நான்கு பாய்மர கட்டமைப்பையும் உடையது பாய் மரக்கயிறுகளில் கடற்படை பயிலுனர்கள் அணிவகுத்து நின்ற நிலையில் லண்டன் கனறிவோர்ப் பகுதியின் சவுத் கீ இறங்குதுறைக்கு இந்த் பாரிய கப்பல் பிரவேசித்து நங்கூரமிட்டுள்ளது.

பெருநாட்டின் தேசிய தினம் எதிர்வரும் 28 ஆந்திகதி வரும் நிலையில் பிரித்தானியாவுக்கும் பெருவுக்கும் இடையிலான உறவைவெளிப்படுத்தும் வகையில் ஆறு நாட்களுக்கு இந்தக் கப்பல் லண்டனில் தரித்து நிற்கும். அதன்பின்னர் இது ஜேர்மனியின் ஹம்பேர்க் துறைமுகத்தை நோக்கிப் பயணிக்கும்.

இந்தக்கலத்தில் மொத்தம் 243 பணியாளர்கள் உள்ளனர் அவர்களில் அநேகமானோர்  கடற்படை பயிலுனர்களாவர்கள்.கடந்தமாதம் உலகி;ன் உயர்ந்த கப்பல்களுக்கு இடையே நடந்த அனைத்துலக போட்டியில் வெற்றிஇலக்குக்குரிய தூரத்தை கடந்து 43 மணிநேரங்களில் கனேடியத் துறைமுகத்தை சென்றடைந்த இந்தக்கப்பல் அந்தப் போட்டியில் முதலாம் இடத்தைத் தட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: