உரியில் மீண்டும் தாக்குதல்!
Tuesday, September 20th, 2016
பயங்கரவாத தாக்குதல் நடந்த உரியில் இரண்டு நாட்கள் கழித்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்திஉள்ளது.
காஷ்மீர் மாநிலம் உரியில் நேற்று முன்தினம் ராணுவ முகாமுக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தற்கொலை படை பயங்கரவாதிகள் புகுந்து தாக்கியதில் 18 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவம் மீது சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய இந்த தாக்குதல் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என ராணுவ அதிகாரிகளும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 4 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்–இ–முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் ஆயுதங்களும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. சர்வதேச அளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா முடிவுசெய்து உள்ளது.
இதற்கான முதல் பணியை சுஷ்மா சுவராஜ் ஐ.நா.சபையில் முன்னெடுக்கிறார்.
உரி பயங்கரவாத தாக்குதலால் இந்தியா கடும் கோபத்தில் உள்ளநிலையில் இன்று மீண்டும் உரியில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. உரியில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு உள்ளது. சம்பவம் தொடர்பான தகவல்கள் விரைவில்..
Related posts:
|
|