உயிருக்கு போராடிய குழந்தை: நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞன்!

Monday, May 28th, 2018

பாரிஸில் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து, தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிசிற்கு மேற்கு ஆஃபிரிக்க நாடான மலியிலிருந்து குடிபெயர்ந்தவர் கசாமா (வயது 22) .

அவர் குழந்தையை காப்பாற்றும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலவாக பரவியது.ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு தாவி, 4 வயது குழந்தையை காப்பாற்றினார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் கசாமாவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க, அவரை தன் மாளிகைக்கு அழைத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: