உதவிக்காக கொடுத்த கடிதத்தால் 10 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Thursday, September 15th, 2016

ஹைதராபாத்தில் பிறருக்கு உதவி செய்வதற்காக கடிதம் கொடுத்த 10 வயது சிறுவனை இரண்டு இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ளா ஹயந்த்நகர் பகுதியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் அசோக், டியூசன் முடித்துவிட்டு திரும்புகையில், அவ்வழியே வந்த பெண்ணிடம் கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

கடிதத்தை பெற்ற அப்பெண்மனி உடனடியாக அவரின் கணவர் விஜய், தம்பி துர்கா பிரசாத்திடம் கொடுத்துள்ளார். அதை படித்து பார்க்காமல் விஜய், துர்காபிரசாத் ஆகியோர் அச்சிறுவனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதனால் ஆவேசமடைந்த சிறுவனின் தந்தை பொலிசில் புகார் தெரிவித்தார். பொலிசார் நடத்திய விசாரணையில் பைபிலில் பிறருக்கு உதவி செய்தால் நல்லது என கூறிப்பிட்டிருந்தது. அதன்படியே அச்சிறுவனும், அதனை ஒரு கடிதத்தில் எழுதி அப்பெண்ணிடம் கொடுத்துள்ளான். அதை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என தெரியவந்துள்ளது.இதனால் பொலிசார் துர்காபிரசாத், விஜய் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

timthumb

Related posts: