உணவு விடுதி மீது ஆயுததாரிகள் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!

Friday, August 26th, 2016

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் அமைந்துள்ள கடற்கரை உணவு விடுதியின் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிபிரயோகம் நடத்தியுள்ளனர்.

இந்த் தக்குதலில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொகடிசுவில் உள்ள லிடோ கடற்கரைக்கு அருகில் உள்ள பனதீர் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயேகம் மேற்கொள்வதற்கு முன்னர் கார்க்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த உணவகத்திற்குள் நுழைந்த ஆயுதாரிகள் குழு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்த் தாக்குதல் சம்பவத்திற்கு அல்-கொய்தா ஆயுததார அமைப்புடன் இணைந்து செயற்படும் அல்-ஷபாப் என்ற ஆயுததார குழு உரிமை கோரியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் சேதாரம் குறித்து இதுவரை தெளிவான எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும் பாதுகாப்பு படையினருக்கும் குறித்த ஆயுததாரிகளுக்குமான  மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறதென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளின் ஆதரவில் செயல்படும் சோமாலியா அரசாங்கத்தை வீழ்த்த அல்-ஷபாப் ஆயுததாரிகள் இவ்வாறான கடும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் குறித்த அமைப்பினரால் லிடோ கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: