உணவு பற்றாக்குறையால் 1.4 மில்லியன் சிறார்களுக்கு உயிரச்சுறுத்தல் – ஐ.நா!

Sunday, March 12th, 2017

உணவு பற்றாக்குறை காரணமாக இவ்வருடத்தில் சுமார் 1.4 மில்லியன் சிறார்கள் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக யுனிசெப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது பாரிய மனிதாபிமான பற்றாக்குறைக்கு முகம் கொடுத்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை பிரிவு பிரதானி ஸ்டெபான் ஒபரொயன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சுமார் 20 மில்லியன் மக்கள் தற்போது உயிரச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

அவர்களில் அதிகமானோர் யேமன், சோமாலியா, தென் சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையிலிருந்து மனிதவுயிர்களை காப்பாற்றும் முகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளதாக ஸ்டெபான் ஒபரொயன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: