உணவில் விஷம் கலந்து ராம்குமார் கொலை? -வழக்கறிஞர் தகவல்!

சுவாதி கொலையாளி ராம்குமார் சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது..
இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜன், பேட்டியளித்துள்ளார். அதில் ராம்குமார் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார்.
தன்னிடம் உணவால் ஏற்பட்ட பிரச்சனையால் மருத்துவமனையில் ராம் குமார் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் இருந்து செய்தி வந்ததாகவும், இதனால் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு செல்வதாகவும், அதன் பிறகே முழுத் தகவல் தெரியும் என்றும் கூறினார். கழுத்தை அறுத்துவிட்டு, ராம்குமார் எப்படி தற்கொலைக்கு முயன்றார் என கூறினார்களோ அதே போலத்தான் இப்போதும் நடந்திருக்கும் என நம்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Related posts:
சிரியாவில் தொடரும் மோதல்கள்: மீட்பு முயற்சிகள் பாதிப்பு ஐ.நா!
விரைவாக பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும்!
ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் கோக், பெப்சி உள்ளிட்டவற்றுக்குத் தடை!
|
|