உணவகம் ஒன்றில் பயங்கர தீ விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

Tuesday, February 12th, 2019

டெல்லியில் செயல்பட்டு வரும் அர்பிட் பேலஸ் ஹோட்டலில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.