உடன்படிக்கை இல்லாமல் வெளியேற தயார் – தெரெசா மே!

Wednesday, May 31st, 2017

 

ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் உடன்படிக்கை திருப்திகரமாக இல்லாத பட்சத்தில் உடன்படிக்கையின்றி வெளியேற பிரித்தானியா தயார் என பிரதமர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.இதற்கிடையே வருகிற 8ம் திகதி பிரித்தானியாவில் பொதுத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் நேற்று பேட்டியளித்த பிரதமர் தெரெசா மே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த உடன்படிக்கை ஒன்றை உருவாக்கவே விரும்புகின்றோம். இருப்பினும் என்னை பொறுத்தவரையில் பொறுத்தமற்ற உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்துவதை விட உடன்படிக்கை இல்லாமல் வெளியேறுவதே நல்லது. எந்த சூழலுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

Related posts: