உக்ரைன்-ரஷ்யா போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்-துருக்கி அதிபர் வலியுறுத்து.

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கை 50 நாட்களை கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் உடனடியாக முரண்பாடுகளை களைந்து பொதுமக்களை கருத்தில் கொண்டு மேற்படி போரை உடன் முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அநியாயமான அழிவுகள் உக்ரைன் நிலப் பரப்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் எதிர்கால வாழ்கை அழிக்கப்பட்டிருக்கின்றது. எனவே இவற்றிற்கு முடிவு உண்டாக்குவதற்கு இரண்டு நாடுகளும் உடனடியாக போர் நிறுத்தத்தினூடாக சமாதான உடன்பாட்டிற்குள் வரவேண்டும் என துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் படியும் அவற்றிற்கு தாம் முழுமையான ஆதரவினையும் உதவியினையும் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எர்டோகன் இரு நாடுகளுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் முயற்சி செய்து வருவதும் ரஷ்ய அதிபர் புடினை மேற்படி போரை நிறுத்தும் படி தொடர்ந்து வலிறுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் மேற்படி விடயம் குறித்து கலந்துரையாடுவதற்கும் எடுக்கப்பட வேண்டிய சில முடிவுகள் குறித்த தீர்மானத்தை வரைவதற்காகவும் இந்த வாரம் துருக்கி பயணமாக உள்ளதாகவும் அங்கு அதிபர் எர்டோகன் சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
|
|