உக்ரைனுக்கும் – ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை புட்டினின் அதிரடி அறிவிப்பு!

Wednesday, September 21st, 2022

உக்ரைனுக்கும் – ரஷ்யாவுக்கும்  இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை என ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

போர் அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றும்  தேசிய உரையிலேயே விளாடிமிர் புட்டின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

ரஷ்யாவை அழிப்பதே மேற்குலகின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் மக்களை பீரங்கித் தீவனமாக மாற்ற மேற்குலகு முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான அமைதியை மேற்குலகு விரும்பவில்லை எனவும், டான்பாஸை விடுவிப்பதே ரஷ்யாவின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

டான்பாஸ் பகுதியில் போராடும் தன்னார்வலர்களுக்கு சட்ட அந்தஸ்தை வழங்குவதே இலக்கு என்றும்,  விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நமது மக்களைப் பாதுகாக்க அவசர முடிவு எடுக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக  பகுதி திரட்டலுக்கு(துணை இராணுவம்)  பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.  அதற்கான ஆணையில் ஏற்கனவே கையொப்பமிடப்பட்டுள்ளது  பகுதி அணி திரட்டல் இன்று தொடங்குகின்றது. 

அணி திரட்டப்படும் அனைத்து குடிமக்களும் முழு ஆயுதப்படை அந்தஸ்த்தைப் பெறுவார்கள்.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை மிரட்டி வருகின்றன. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவிடம் பல ஆயுதங்கள் இருப்பதாகவும் புடின் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு நாடுகள் அணு ஆயுத அச்சுறுத்தலில் ஈடுபடுவதாகவும் புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

00

Related posts: