உகாண்டாவில் கடும் மழை: 18 பேர் உயிரிழப்பு!

Wednesday, April 24th, 2019

கிழக்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகான்டாவின் இரு மாநிலங்களில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளப் பெருக்கினால் பல வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டத்தில் புயென்டே மாநிலத்தில் 13 பேரும் கமுலி மாநிலத்தில் 5 பேரும் உயிரிழந்ததாக உகாண்டா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், காயமடைந்த சுமார் 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: