ஈரான் நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் அலி லாரிஜானி !

Monday, May 30th, 2016

பழமைவாதியான அலி லாரிஜானியை நாடாளுமன்ற சபாநாயகராக மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.

அவர் தனக்கு எதிராக போட்டியிட்ட சீர்திருத்த பிரிவை சேர்ந்த முகமது ரேஸா ஆரேஃப்பை எளிதில் தோற்கடித்தார். அடுத்த சில நாட்களில், இடைக்கால நியமனம் உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதற்கு பதிலாக, அந்நாட்டின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் ஏற்படுத்தி கொண்ட ஒப்பந்தத்தை அலி லாரிஜானி ஆதரித்தார்.அண்மையில் நடந்த ஈரான் நாடாளுமன்ற தேர்தலில் பங்கேற்ற மிதவாதிகள் மற்றும் சீர்திருத்தவாதிகளின் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றனர்.

 

Related posts: