ஈரான் ஜனாதிபதி பதவியில் தொடர ரௌஹானிக்கு அனுமதி!

Friday, August 4th, 2017

ஹசன் ரௌஹானியை இரண்டாவது முறையாக மீண்டும் எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு ஈரானின் உச்ச தலைவரான அயத்துல்லா அலி-கமெய்னி ஒப்புதல் அளித்துள்ளார்.

தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, கமெய்னியின் தலைமை தளபதியினால் உச்ச தலைவர் கமெய்னியின் ஒப்புதல் வாசிக்கப்பட்டது.

அதன்படி, ரௌஹானி எதிர்வரும் சனிக்கிழமை உத்தியோகப்பூர்வமாக மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். அதனை தொடர்ந்து அமைச்சரவையை நியமிப்பதற்கு அவருக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரானின் புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் கடந்த மே மாதம் நடைபெற்றது. அதில் ரௌஹானி, 57 வீத வாக்குகளால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: