ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரான்ஸ்!

Wednesday, June 26th, 2019

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு, பிரான்ஸ் வெளியுறுவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் யூலை 7ஆம் திகதி அணுசக்தி ஒப்பந்தத்தில் புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக ஈரான் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை மீறுவது ஒரு கடுமையான தவறு என்றும், பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் ஜேர்மன ஆகியவை ஈரானுக்கு புரியவைக்க செயல்படுவதாகவும், அவ்வாறு செய்வதை ஈரான் விரும்பவில்லை என்று பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன்-யவ்ஸ் லு டிரையன் எச்சரித்துள்ளார்.

ஈரான் ஒப்பந்தத்தை மீறுவது தவறு, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோசமான பிரதிபலிப்பாக இருக்கும் என்று ஜீன்-யவ்ஸ் லு ட்ரையன் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா விலகியது. இதனையடுத்து, ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈரான் தனது அணுசக்தி உறுதிப்பாட்டை மீறுவது தனது நலனில்லை என்று கூற பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரித்தானியா முற்றிலும் அணிதிரட்டப்பட்டதாக அவர் கூறினார். மேலும், நிலைமையை விரிவாக்க ஐரோப்பியர்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: